×

கூகுள் மேப் மூலமாக இணைத்து 23 ஆயிரம் கேமராக்கள் கண்காணிக்க திட்டம்

 

கோவை, ஜூலை 28: கோவை மாநகரில் 23 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. இந்த கேமராக்களை கூகுள் மேப்பில் இணைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட போலீசார் தங்களது எல்லைக்குப்பட்ட பகுதியில் பொது இடங்கள், வீதி, பஸ் ஸ்டாப் போன்ற பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கேமராக்களின் விவரங்களை போலீஸ் தொழில் நுட்ப பிரிவிற்கு அனுப்பி வைப்பார்கள். தொழில் நுட்ப பிரிவு போலீசார் அவற்றை கூகுள் மேப்பில் கண்டறிந்து அதில் உள்ள விவரங்களை பார்க்க வழிவகை செய்யப்படும்.

இதன் மூலம் மாநகர போலீசார் எந்தந்த பகுதிகளில் கேமராக்கள் உள்ளது, அதில் என்ன பதிவாகியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். நகரில் உள்ள, 23 ஆயிரம் கேமராக்கள் கூகுள் மேப் பதிவு பகுதிக்குள் கொண்டு வரப்படும். ஏதாவது ஒரு இடத்தில் திருட்டு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடந்தால் அந்த பகுதியில் உள்ள கேமராக்களை போலீஸ் அதிகாரிகள் கூகுள் மேப்பில் இணைத்து தெரிந்து கொள்ளலாம். அவற்றில் இருந்து தேவையான காட்சிகளை கைப்பற்ற முடியும். மேலும் குற்றவாளிகள் எந்த வழியாக சென்று இருக்கலாம் என்பதையும் அடையாளம் காண முடியும். கேமராக்கள் குறைவாக உள்ள இடங்களில் புதிதாக கேமராக்கள் பொருத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

The post கூகுள் மேப் மூலமாக இணைத்து 23 ஆயிரம் கேமராக்கள் கண்காணிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...